பக்கம் 621
அத்தியாயம்-102
அடுத்த நூல்
சிந்தாமணியை
நான் அச்சிட்டு வந்த காலத்தில் ஸ்ரீரங்கம்
ஹைஸ்கூலுக்கு ஒரு நல்ல தமிழ்ப் பண்டிதரை
அனுப்ப வேண்டுமென்று அந்தப் பள்ளிக்கூடத்து அதிகாரிகள் எனக்குத் தெரிவித்தார்கள். என்னிடம் பாடம் கேட்டவரும் சில காலம் திருவாவடுதுறையில்
இருந்தவருமான சிதம்பரம் மு.சாமிநாதையரென்பவரை அனுப்பினேன்.
அவர் அவ்வேலையை ஒப்புக்கொண்டு அந்தப் பள்ளிக்கூட சம்பந்தமான அதிகாரிகளுக்கும் மாணாக்கர்களுக்கும்
திருப்தியுண்டாகும்படி நடந்து
வந்தார். அவர் சிந்தாமணிப் பதிப்புக்குச்
சிலரிடம் கையொப்பம் வாங்கித் தந்தார். கௌரவமாக எல்லாரோடும் பழகிவந்த
அவர் சில அசௌகரியங்களால் வேலையை விட்டு விட்டு
ஒருவருக்கும் தெரியாமல் வேறு ஊருக்குப் போய் விட்டார். அப்பொழுது
அந்த வேலைக்கு வேறு ஒருவரை நியமித்தல் அவசியமாக
இருந்தது. அந்தப் பள்ளிக்கூடத்தைச் சார்ந்த
ஒருவர் என்னிடம் வந்து வேறொரு தக்க
பண்டிதரை அனுப்ப வேண்டுமென்று சொன்னார். திருமானூர் அ.கிருஷ்ணையரை அவ்வேலையில் நியமிக்கச் செய்யலாமென்று எண்ணினேன். ஆனால் அவர் அப்போது
சிந்தாமணிப் பதிப்புக்கு உதவியாகச் சென்னையில் இருந்து வந்தமையால் சில
காலம் வேறு ஒருவரைப் பார்த்துவரச் செய்யலாமென்று நிச்சயித்தேன்.
அக்காலத்தில்
திருவாவடுதுறையில் படித்துக் கொண்டிருந்த ம.வீ.ராமானுஜாசாரியரைக்
கண்டு, கிருஷ்ணையர் சென்னையிலிருந்து திரும்பி வந்து ஸ்ரீரங்கம் வேலையை ஒப்புக் கொள்ளச்
சில மாத காலமாவது ஆகுமென்றும்,
அதுவரையில் அவ்வேலையைப் பார்த்துவர வேண்டுமென்றும் கூறினேன். அவர்
அவ்வாறே செய்வதாக உடம்பட்டு வேலையைப் பார்த்து வந்தார். சிந்தாமணி
பூர்த்தியானவுடன் கிருஷ்ணையர் ஸ்ரீரங்கத்துக்குப் போய் ராமானுஜாசாரியரிடமிருந்து
அவ்வேலையை ஏற்றுக் கொண்டார். நான் தியாகராச
செட்டியாரைப் பார்க்கச் சென்ற காலத்தில் கிருஷ்ணையர் ஸ்ரீரங்கத்தில்
வேலை பார்த்து வந்தார்.
குறிப்பு;-
(என் சரித்திரத்தில் இடம்பெற்ற குறிப்பு)
மகா பாரதத் தமிழ் மொழிபெயர்ப்பை
வெளியிட்டவரும் கும்பகோணம்
காலேஜில்
தமிழ்ப் பண்டிதராயிருந்தவருமான காலஞ் சென்ற மகா
மகோபாத்தியாய
ம. வீ. ராமானுஜாசாரியார் இவரே.
++++++++++++++++++++++++++
அத்தியாயம்-106
பக்கம் 651
என்னிடம்
பாடங் கேட்டுக் கொண்டிருந்த ஸ்ரீ சொக்கலிங்கத் தம்பிரானும்,
ஸ்ரீ
ம.வீ. இராமனுஜாசாரியரும் வேறு
சில அன்பர்களும் பத்துப் பாட்டு
ஆராய்ச்சியில்
உடனிருந்து ஒப்பு நோக்குதல் முதலிய
பல வகை உதவிகளைச் செய்து
வந்தார்கள்.
++++++++++++++++++++++++++++++++++++
அத்தியாயம்-117
புறநானூற்று ஆராய்ச்சி
உதவி புரிந்தோர்
பக்கம் - 725
என்னுடன்
இருந்து திருமானூர் அ. கிருஷ்ணையரும். ம.வீ.இராமானுஜாசாரியரும்
இந்த விரிந்த ஆராய்ச்சியில் உதவி
செய்து வந்தார்கள்.
+++++++++++++++++++++++++++++++++++++
மேற்கண்டவற்றிலிருந்து நமக்குக் கிடைக்கும்
தகவல்கள்
உ.வே.சாமிநாதையர் அவர்களின்
பத்துப்பாட்டு ஆராய்ச்சியில் உடனிருந்து ஒப்பு நோக்குதல் செய்திருக்கிறார்.
உ.வே.சாமிநாதையர் அவர்களின்
புறநானூற்று ஆராய்ச்சியில் உதவி செய்திருக்கிறார்.
உ.வே.சாமிநாதையரின் வேண்டுகோளுக்கிணங்க
திருவாவடுதுறையில் படித்துக் கொண்டிருந்த ம. வீ.ராமானுஜாசார்
ஸ்ரீரங்கம் ஹைஸ்கூலில் தமிழ்ப் பண்டிதராக வேலை
பார்த்திருக்கிறார்.
+++++++++++++++++++++++++++++++++++
No comments:
Post a Comment