Thursday, August 8, 2013

இந்துநேசன் வெளியிட்ட செய்தி


இந்துநேசன், 14-12-08:-

"கும்பகோணம் நேடிவ் ஹைஸ்கூல் தமிழ்ப் பண்டிதராகிய ஸ்ரீமத். ம.வீ.இராமாநுஜாசாரியரவக்ள் வெளியிட்டுக் கொண்டுவரும் ஸ்ரீமஹாபாரத வசனத்தின்  இரண்டாவது ஸஞ்சிகையொன்று சில தினங்களுக்குமுன் வரப்பெற்று மிக்க சந்தோஷம் அடைந்தோம். ஐந்தாம் வேதமென்று வழங்கப்படுவதும் படிப்பவர்களுக்கு நல்லொழுக்கங்களையும் சீலத்தையும் நற்குணங்களையும் கற்பிப்பதும், எல்லோராலும் பூஜிக்கப்பட்டு வருவதுமாகிய பாரதமானது ஒவ்வொருவரிடத்தும் இருப்பது இன்றியமையாத்தென்பதை நாம் எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை. இப்போது தமிழில் பாரதவசன் நூல்கள் பல வழங்கி வந்தாலும், அவை சரியான மொழிபெயர்ப்பென்று சொல்ல இடமில்லை. சில மிகச் சுருக்கமாக உள்ளன. வேறு சில பிழைபட்டுமிருக்கின்றன. இக்குறைகளை நீக்கி, ஸ்ரீவியாஸர் இயற்றிய ஸம்ஸ்கிருத நூலிலுள்ள வார்த்தை ஒன்றையும் விடாமல் அப்படியே மொழிபெயர்த்து வெளியிட வேண்டுமென்ற எண்ணங்கொண்டே இராமானுஜாசாரியரவர்கள் பதிப்பித்து வருகிறார்களென்று தெரிகிறது.  இம்மொழிபெயர்ப்பானது, ஸம்ஸ்கிருதத்தில் சிறிது ஞானமடைந்திருப்பவர்கள் தம்முடைய ஞானத்தை விருத்திசெய்துகொள்வதற்கும் அப்பாஷையில் பயிற்சி இல்லாதவர்கள் ஸ்ரீவியாஸருடைய மனோபாவங்களை எளிதில் அறிந்து கொள்ளுதற்கும் வழியாக உள்ளது. சிறந்த இரண்டு ஸம்ஸ்கிருத வித்வான்கள் ஸம்ஸ்கிருதத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கிறார்கள். ஆங்கிலத்திலும், தமிழிலும், வடமொழியிலும் பாண்டித்தியமுள்ள ஸ்ரீ இராமானுஜாசாரியரவர்கள் தாமே பலமுறை அந்த வசனத்தைப் பார்த்துத் தமிழ் நடைக்கு ஒத்தவாறு கூடுமானவரையில் மாற்றிவருகிறார்கள். தமிழில் வசன நூல்கள் நல்லவைகளாக இல்லையென்று சொல்பவர்களுடைய குறையை இவ்வசனம் நீக்குமென்பதில் சந்தேகமில்லை.

2 comments:

  1. Ffxiv Titanium Nugget 2 2 - Vitanium Art
    Ffxiv Titanium Nugget 2 2 2. View titanium blue Details. The FFXiv Titanium Nugget 2 titanium flask 2 2 2. The FFXiv Titanium titanium ore Nugget 2 silicone dab rig with titanium nail 2 2 2 2. The FFXiv Titanium Nugget 2 2 2 2 2. View 2013 ford focus titanium hatchback Details.

    ReplyDelete